இரவு முழுவதும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 208 ட்ரோன்கள் இடமறிப்பு
இரு பிராந்தியங்களை தாக்கிய உக்ரேனிய ட்ரோன் ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் பிரையன்ஸ்கில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் மூவர் பலியாகினர்.
ட்ரோன் தாக்குதல்
உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேற்றிரவு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு இரசாயன ஆலையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது.
மூவர் பலி
இந்த தாக்குதல்களில் வோல்கோகிராட் பிராந்தியத்தில் 60 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஆண்ட்ரி போச்சரோவ் தெரிவித்தார்.
மேலும், தாக்குதலுக்கு பின் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் ஒருவரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் 208 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |