15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி: 306 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா
Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகினர்.
ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதிகளை குறிவைத்து, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் பெர்ம் பிராந்தியங்கள் மற்றும் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை நகரமான Grayvoron-யில் ஒருவர் கொல்லப்பட்டார்.

பெல்கோரோட் பிராந்தியத்தில் கார் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்ததாக உள்ளூர் அவசரகால தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பெர்ம் பிராந்தியத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் டிமிட்ரி மஹோனின் தெரிவித்தார்.
15 வயது சிறுமி பலி
இணைக்கப்பட்ட கிரிமியாவில், செவாஸ்டோபோல் துறைமுக நகரில் இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமியும், ஒரு ஆணும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கும் திங்கட்கிழமை காலைக்கும் இடையில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா முழுவதும் 306 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |