வட அமெரிக்காவை நோக்கி 3 கப்பல்கள்: அறிவித்த துணை பிரதமர்
Three diesel ships travel to north america: வட அமெரிக்காவை நோக்கி மூன்று கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக ரஷ்ய துணை பிரதமர் தெரிவித்தார்.
ரஷ்ய டீசலை ஏற்றிய மூன்று கப்பல்கள் வட அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ரஷ்ய துணை பிரதமர் தெரிவித்தார்.
எரிபொருள் மீதான தடை
உக்ரைன் மீதான போருக்காக, ரஷ்யா ஈட்டும் வருவாயைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட, எரிபொருள் மீதான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக நீக்கியது.

உலக சந்தைகளுக்கு டீசலை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அவர் அறிவித்த ஒப்பந்தத்தின்படி, அக்டோபர் மாதத்தில் 300,000 மெட்ரிக் டன் எரிபொருளும், அதனைத் தொடர்ந்து மேலும் சில அளவுகளும் கொண்டுவரப்படவுள்ளன.
மூன்று கப்பல்கள்
இந்த நிலையில், ரஷ்ய டீசலை ஏற்றிய மூன்று கப்பல்கள் வட அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர், "முதல் மூன்று எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்குக் கடற்கரையை நோக்கி புறப்பட்டுவிட்டன; இதற்கு 'ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்' முக்கிய ஆதரவை வழங்கியுள்ளது" என்றார்.
மேலும், அமெரிக்க மற்றும் உலக சந்தைகளுக்கு எரிபொருளை வழங்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ரஷ்ய நிறுவனங்களால் 500,000 மெட்ரிக் டன் டீசலை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
