822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யப் படை
உக்ரைனின் 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.

இது மாஸ்கோ பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான கிடங்கு தாக்கப்பட்ட Podolsk நகரில் 83 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
822 உக்ரேனிய ட்ரோன்கள்
மேலும், பலர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர் ஆண்ட்ரி வெரோபியோவ் தனது டெலிகிராம் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுக்கு அருகில் உள்ள டெமோடெடோவோ நகரில் உள்ள கிடங்கு உட்பட, வேறு பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் 822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |