அணு ஆயுதங்களை தயாரிக்கும் உக்ரைன்: ரஷ்ய ஊடகங்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பயங்கரமான அணுஆயுதங்ககளை மறைமுகமாக தயாரித்து வருவதாக ரஷ்ய ஊடகங்கள் குற்றம் சாட்டிவருகின்றன.
மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு எதிர்த்து, ரஷ்யா உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் திகதி தனது போரை தொடங்கியது.
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை எதிர்த்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது.
இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு அதன் மதிப்பை இழந்து இருந்த போதிலும் உக்ரைன் மீதான தனது போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திவருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவின் செய்தி ஊடகங்களான THE TASS, RIA மற்றும் INTERFAX ஆகியவை கடந்த 2000-ஆம் ஆண்டு பேரழிவுக்கு உள்ளாகி மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் வைத்து ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மிகவும் மோசமான அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளன.
இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள உக்ரைன் அரசாங்கம், தங்கள் நாட்டிற்கு மீண்டும் அணுஆயுத குழுவில் இணைய விரும்பவில்லை எனவும், உக்ரைனில் இருந்த அனைத்து அணுஆயுதங்ககளையும் 1994ல் சோவியத் யூனியன் பிரியும் போதே கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ஊடகங்களின் இந்த ஆதாரமற்ற இந்த அணுஆயுத குற்றசாட்டை வைப்பதற்கு முன்னரே, உக்ரைன் சோவியத் யூனியனின் அறிவை கொண்டு ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டிருந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.