வீரர்களின் உடல்களை ஒப்படைக்க போர்நிறுத்தம்: உக்ரைன் நிராகரித்ததாக கூறும் ரஷ்யா
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைப்பதற்கான, உள்ளூர் போர்நிறுத்தத்தை உக்ரைன் நிராகரித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் ஷெல் தாக்குதல்
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையில், கோஸ்டியாண்டிநிவ்கா ஒரு முக்கிய இடமாகும்; அதைக் கைப்பற்ற நீண்ட காலமாக முயன்று வருகிறது.

கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்டியாண்டிநிவ்கா நகரின் மீது உக்ரைன் ஷெல் தாக்குதலை நடத்தியது.
அதே சமயம் சண்டையில் கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்களை ஒப்படைப்பதற்கு ஏதுவாக, அந்த தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யா கேட்டுள்ளது.
கோஸ்டியாண்டிநிவ்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கட்கிழமை 6 மணிநேர போர்நிறுத்தத்தையும் முன்மொழிந்துள்ளது.
நிராகரித்த உக்ரைன்
இந்த உள்ளூர் போர்நிறத்தத்தை உக்ரைன் நிராகரித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாஸ்கோவின் படைகள் கோஸ்டியாண்டிநிவ்காக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய இராணுவத் தளபதிகள் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்தனர்.
ஆனால், உக்ரைன் இந்தக் கூற்றை மறுத்து, தங்கள் படைகளே அந்நகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |