எல்லையை நெருங்கிய அமெரிக்க விமானம்.. விரட்டியடித்த ரஷ்ய போர் விமானம்! கடலுக்கு மேல் நடந்த பரபரப்பு சம்பவம்
தங்கள் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்க விமானத்தை ரஷ்ய போர் விமானம் விரட்டி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் கடல் மேலிருக்கும் ரஷ்ய வான்வெளியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் கடல் மேலிருக்கும் ரஷ்ய வான்வெளி எல்லைக்கு அருகே விமானம் ஒன்று வருவது ரேடாரில் தெரிந்தது.
உடனே அந்த விமானத்தை அடையாளம் காணவும், அது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும் ரஷ்யாவின் MiG-31 விமானம் அனுப்பப்பட்டது.
எல்லையை நோக்கி வரும் விமானம் அமெரிக்க விமானப்படையின் B-1B விமானம் என ரஷ்யாவின் மிக் -31 போர் விமானக் குழு அடையாளம் கண்டது.
பின் அதை இடைமறித்து உடன் சென்று எல்லைக்கு அப்பால் விட்டது.
அமெரிக்க விமானம் எல்லையிலிருந்து திரும்பிச்சென்ற பிறகு, ரஷ்ய போர் விமானம் தனது சொந்த விமானநிலையத்திற்கு திரும்பியது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின்படி ரஷ்ய விமானம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ரஷ்ய குறிப்பிட்டுள்ளது.