ஒரே மாதத்தில் சிங்கப்பூர் அளவிற்கு உக்ரைன் நிலத்தை கைப்பற்றிய ரஷ்யா
ரஷ்யா நவம்பரில் மாதத்தில் மட்டும், உக்ரைனில் சிங்கப்பூரின் பரப்பளவிற்கு இணையான நிலத்தை கைப்பற்றியுள்ளது.
இது யுத்தத்தின் தொடக்க காலத்திலிருந்து ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட மிகப்பாரிய நிலப்பரப்பாகும்.
Agence France-Presse (AFP) நடத்திய ஆய்வின்படி, American Institute for the Study of War (ISW) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்ய படைகள் நவம்பரில் 725 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளதாக்க தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் வெறும் 719 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் ரஷ்யா 610 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றிய நிலையில், நவம்பர் மாதம் அதன் சாதனையை முறியடித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் ரஷ்ய படைகள் ஒட்டுமொத்தமாக 3,500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளன.
இது 2023ஆம் ஆண்டு முழுவதும் கைப்பற்றிய நிலப்பரப்பை விட 6 மடங்கு அதிகமாகும்.
ரஷ்யாவின் முக்கிய முன்னேற்றங்கள் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடந்துள்ளன. இப்பிராந்தியத்தில் உக்ரைனின் கட்டுப்பாடு 2024 தொடக்கத்தில் 40% இருந்ததை 33% ஆக குறைத்துவிட்டது.
குளிர்காலத்திலும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இழப்புகள்
இருப்பினும், ரஷ்யா அதன் இராணுவத்தில் பெருமளவிலான இழப்புகளை சந்தித்துள்ளது. உக்ரைனின் தரவுகளின் படி, கடந்த மாத இறுதியில் ஒரே நாளில் 2,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் நிலப்பரப்பு கைப்பற்றல் வளர்ந்தாலும், இராணுவ இழப்புகள் அதன் ஆற்றலுக்கு மிகப்பாரிய சவாலாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Ukraine War, Russian Federation, Ukraine Russia War, Singapore, Ukraine Territory