இரத்தம் சிந்தப்படவேண்டும்... பிரித்தானியாவுக்கு ரஷ்யா விடுத்துள்ள பயங்கர எச்சரிக்கை
புடின் ஆதரவாளர் ஒருவர் பிரித்தானியாவுக்கு மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானிய இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று கூறியுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இரத்தம் சிந்தப்படவேண்டும்...
கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள், ரஷ்யாவுக்குள் பிரபலங்களைக் கொல்வதற்காக பிரித்தானியா விநியோகிக்கும் வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகவே, பிரித்தானியர்களின் இரத்தம் நிச்சயம் சிந்தப்படவேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் ரஷ்ய ஜெனரல்கள் உட்பட மூத்த ராணுவ அதிகாரிகளின் கொலைகளை அரங்கேற்றுவதாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் தேசிய தொலைக்காட்சியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |