கொடிய நோய்களுடன் போருக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் பகீர் தகவல்
உக்ரைன் போரை முன்னெடுக்க வேண்டிய மிக நெருக்கடியாக கட்டத்தில் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட வீரர்களை ரஷ்யா போர்க்களத்தில் அனுப்பி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மோசமடைந்து வருவதற்கான
கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரைச் சுற்றி, தங்கள் மருத்துவ நிலையைக் குறிக்க சிவப்பு கைப்பட்டை அணிந்த வீரர்கள் காணப்பட்டதை அடுத்தே இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவப்பு பட்டையுடன் வீரர்கள் காணப்பட்ட பகுதியானது சமீபத்தில் ரஷ்ய படைகளால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானது. இதுபோன்ற கைப்பட்டைகளுடன் வீரர்களைப் பார்ப்பது புடினின் துருப்புக்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதற்கான சான்றாகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
வெளியாகும் தகவலில், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. இது ரஷ்ய வீரர்களுக்கு மட்டுமின்றி, உக்ரைன் வீரர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஜூலை மாதம் வெளியான தகவலில், ரஷ்ய வீரர்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
போரின் தொடக்கத்தில் இருந்ததை விட, ரஷ்ய வீரர்களிடையே 20 மடங்கு அதிகமான தொற்றுகள் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உளவியல் அழுத்தம்
வீரர்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு அதிகரிக்க காரணமாக கூறப்படுவது, இரத்தமாற்றங்களில் அதிகரிப்பு மற்றும் கள மருத்துவமனைகளில் அதே சிரிஞ்சை மீண்டும் பயன்படுத்துதல் உள்ளிட்டவை என கூறுகின்றனர்.
ஆனால், பாலியல் தொழிலாளர்களாலும், போதை மருந்து பயன்பாட்டிற்காக சிரிஞ்சை பகிர்ந்து கொள்வதாலும் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரித்துள்ளது என கூறுகின்றனர்.
கொடும் நோயுடன் வீரர்கள் போர்க்களத்தில் காணப்படுவது எதிரி மீது ஒரு குறிப்பிட்ட தார்மீக மற்றும் உளவியல் அழுத்தத்தை செலுத்த முடியும் என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரேனிய இராணுவத்தை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |