ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி - உக்ரேனிய பொது வழக்கறிஞர் அலுவலகம்
கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ட்ரோன்கள்
உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு, ஈரான் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரான் இராணுவ தலைமையுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதால் உக்ரைனில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டோரெட்ஸ்க் நகரில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகரத்திற்குள் 2 பேர் இறந்ததாகவும், அதன் அருகில் உள்ள நகரமான பிவ்னிச்னேவில் மேலும் 2 பேர் இறந்ததாகவும் ஒரு அறிக்கையில் அலுவலகம் தெரிவித்தது.
Mary Altaffer/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |