உக்ரைனின் முக்கிய நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: பரபரப்பு காட்சிகள்!
உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்கிவ்-வில் வெள்ளிகிழமையான இன்று ரஷ்ய படைகள் பயங்கரமான ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதாக அந்தப் பகுதியின் மேயர் இஹோர் தெரேகோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் தீவிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் இதில் 20,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் வரை உயிரிழந்து இருக்கும் நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.
Just after midnight Russia launched four missiles at Kharkiv. Rescuers worked promptly and professionally to eliminate fires. Luckily no casualties reported. Kharkiv – hold on, you are strong! pic.twitter.com/uFJSwi6sXl
— Maria Avdeeva (@maria_avdv) July 28, 2022
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் அதிகமாக காணப்படும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், வெள்ளிகிழமையான இன்று அதிகாலை உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்கிவ்-வில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்தப் பகுதியின் மேயர் இஹோர் தெரேகோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு ஒன்றும், பல்கலைக்கழகம் ஒன்றும், முற்றிலுமாக சேதமடைந்து இருப்பதாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நாட்டின் அவசர சேவை அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: இந்திய விமானப்படையின் ஜெட் விமானம் விபத்து: 2 விமானிகள் பலி
ஆனால் இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.