அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா குண்டு மழை
உக்ரைனில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ள இரசாயன தொழிற்சாலை மீது ரஷ்யா பயங்கமாக தாக்குதல் நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா கடந்த மாதம் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி மரியுபோல் நகரத்தை கைப்பற்றியதைப் போல, ரஷ்யப் படைகள் இப்போது, கிழக்கு உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகருக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு மண்டலத்தைத் தாக்கியதாக உக்ரேனிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சீவிரோடோனெட்ஸ்க் (Severodonetsk) நகரத்தைப் பாதுகாக்க உதவியாக மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் அவசர அழைப்புகளை விடுத்துள்ளது.
இதன்மூலம், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடோனியும் என்றும், இது போரின் எதிர்காலப் போக்கிற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
சீவிரோடோனெட்ஸ்க் நகரில் பொதுமக்கள் தப்பிக்க இருந்த ஆற்றுப் பாலத்தை ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான சீவிரோடோனெட்ஸ்க் பொதுமக்கள் தொழி்ற்சாலை பகுதியில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இப்போது, அந்த ஆலை மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்து வருகிறது.