ரஷ்யாவிற்குள் சீறிப்பாய்ந்த 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள்: தீவிரமடைந்த இருதரப்பு தாக்குதல்!
ரஷ்யாவிற்குள் தாக்குதலுக்கு நுழைந்த 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேற்கு ரஷ்ய பகுதிகளை குறிவைத்த 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யா வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி இருப்பதாக மாஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலில், இரவோடு இரவாக ரஷ்யாவின் 7 பிராந்தியங்களை குறிவைத்து அனுப்பப்பட்ட 110 உக்ரைனிய ட்ரோன்கள் சூட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதில் 43 ட்ரோன்கள் ரஷ்ய எல்லை பிராந்தியமான குர்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Dzerzhinsk தொழில்துறை மண்டத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை தடுத்த போது 4 வீரர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் Gleb Nikitin தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் உக்ரைனின் க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 17 பேர் வரை காயமடைந்து இருப்பதாக உக்ரைனிய தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |