சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்: டொனெட்ஸ்க்கில் வெடித்துள்ள கடும் சண்டை!
கிட்டத்தட்ட 300 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக டிரம்ப்-புடின் சந்தித்து பேசிக் கொண்ட அதே வேளையில், உக்ரைனின் டொனெட்ஸ்க்(Donetsk)பிராந்தியத்தில் உக்ரைன்-ரஷ்யா இடையே பலத்த சண்டை நடைபெற்றுள்ளது.
இதில், ரஷ்ய படைகள் தங்கள் இருப்பை நிலைநிறுத்தி கொண்டு, தொடர்ந்து முன்னேற தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டை தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ரஷ்ய படைகள் வெற்றிகரமாக 300க்கும் மேற்பட்ட உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அத்துடன் உக்ரைனின் சாப்சன் ஏவுகணை சேமிப்பு தளங்களையும் குறிவைத்து அழித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டொனெட்ஸ்க்கின் ஜோலோட்டி கொலோடியாஸ் குடியேற்றத்திற்கு அருகில் ரஷ்ய படைகள் தங்களை நிலைகளை வலுவாக அடைந்து இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மறுப்பு
ரஷ்யா தெரிவித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை, அதே சமயம் உக்ரைன் தரப்பு விவரங்கள் ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இருப்பதாக காட்டுகின்றன.
ஆனால் 300 டிரோன்கள் மற்றும் 4 வான்வழி ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |