சுட்டு வீழ்த்தப்பட்ட 443 உக்ரைனிய ட்ரோன்கள்: அசத்திய நவீன ரஷ்ய ரேடார் அமைப்புகள்
உக்ரைன் முன்னெடுத்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யாவின் பாதுகாப்பு படைப்பிரிவினர் வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
இரவோடு இரவாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்து ஏவப்பட்ட 443 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த உக்ரைனிய ட்ரோன்கள் ரஷ்ய பிராந்தியத்தை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இந்த ட்ரோன்களை நகர்வுகளை துல்லியமாக கண்காணித்து வந்த ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்து அழித்துள்ளன.

ரஷ்ய எல்லை நோக்கி வந்த இந்த ஆளில்லா விமானங்களை நவீன ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுத்ததாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வான் பாதுகாப்பு படை வீரர் விரைந்து செயல்பட்டு ட்ரோன்கள் தாக்குதல் இலக்கை அடைவதற்கு முன்பு தடுத்து அழித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |