ரஷ்ய நகரங்களுக்குள் ஊடுருவ முயன்ற உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை
உக்ரைனின் 47 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை அதிகாலை உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஏவப்பட்ட 47 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் முதன்மை இலக்காக உக்ரைனிய எல்லையில் அமைந்துள்ள பிரியன்ஸ்க்(Bryansk) அமைந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் விழுந்த இடத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு விரிவான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |