இந்தியாவில் 500 இராணுவ தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ள ரஷ்யா
ஏரோ இந்தியா கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட இராணுவ தயாரிப்புகளை ரஷ்யா காட்சிப்படுத்தவுள்ளது.
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் 15வது Aero India கண்காட்சியில், ரஷ்யா 500-க்கும் அதிகமான இராணுவ தயாரிப்புகளை கட்சிப்படுத்தவுள்ளது.
முதன்முறையாக, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான Su-57E மற்றும் போர்க்களத்தில் திறமையை நிரூபித்த Lancet-E loitering munition ஆகியவை இந்தியாவில் வெளிப்படுத்தப்படவுள்ளன.
1996 முதல் நடைபெற்று வரும் Aero India கண்காட்சியில் ரஷ்யா தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
இந்த முறை, இக் கண்காட்சியில் 10-க்கும் அதிகமான ரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
United Aircraft Corporation நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வாடிம் பதேகா, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான ஏற்றுமதிக்கு பல நாடுகள் வரிசையில் உள்ளன என தெரிவித்தார்.
இந்திய துணை பாதுகாப்புத் துறை அமைச்சர் சஞ்சீவ் குமார், Su-57 போர் விமானத்தின் திறன்களை மதிப்பீடு செய்யும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Aero India 2025, Russia at air show in India, Su-57E, latest Russian fighter jet, Aero India, Yelahanka Air Force Station, Bengaluru