கடலிலிருந்து உக்ரைன் மீது ஏவுகணைகளை மழைபோல் பொழிந்த ரஷ்யா: 20 பேர் பலியான பரிதாபம்
மே 9ஆம் திகதி வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் ரஷ்யா, கண்மூடித்தனமான தாக்குதல்களில் இறங்கியுள்ளது.
நேற்று, காஸ்பியன் கடலிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைன் மீது மழைபோல் பொழிந்த நிலையில், அந்த ஏவுகணைகள் மக்கள் வாழும் வீடுகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள துணை மின் நிலையங்களை சேதப்படுத்தியுள்ளன.
இதனால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருளில் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
டான்பாஸ் பகுதியில் எண்ணெய்க் கிடங்கு ஒன்று தாக்கப்பட்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக கிழக்கு Donetsk பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரியும் பயங்கர காட்சிகளை வெளியாகியுள்ள படங்களில் காணலாம்.