Operation Absolute Resolve: வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலும், ரஷ்யாவின் மௌனமும்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அதன் நட்பு நாடான ரஷ்யா ஆற்றிய எதிர்வினை குறித்து நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
Operation Absolute Resolve
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளது.

அமெரிக்க ராணுவம், இன்னொரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜனாதிபதியை கைது செய்துள்ள சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், அமெரிக்க கண்டத்தில் ரஷ்யாவின் பெரும் நட்பு நாடாக விளங்கிய வெனிசுலாவின் உள்ளே புகுந்து, அதனை ஜனாதிபதியை கைது செய்துள்ள விடயத்திற்கு,வல்லரசு நாடான ரஷ்யா வெறும் கண்டனத்தோடு நிறுத்திக்கொண்டு, அமைதி காத்து வருகிறது.

Credit: AFP/getty images
இதே போல், உக்ரைன் அதிபரை கைது செய்ய போவதாக உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கைக்கு, அமெரிக்கா வெறும் கண்டனத்தோடு நிற்காமல் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தோடு, உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் மற்றும் போர் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்கா எப்படி வெனிசுலா ஜனாதிபதியை 4 மணி நேரத்தில் கைது செய்தது, ரஷ்யா 48 மணி நேர ராணுவ நடவடிக்கை என தொடங்கியது 4 ஆண்டுகளாக நீடித்து வருவது ஏன் என உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |