ட்ரோன்கள் பறந்ததால் உருவான அச்சம்: சேவையை நிறுத்திய ரஷ்ய விமான நிலையம்
ரஷ்யாவிலுள்ள புகழ் பெற்ற விமான நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்ததால் உருவான அச்சம் காரணமாக அந்த விமான நிலையத்தின் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.
ட்ரோன்கள் பறந்ததால் உருவான அச்சம்
ரஷ்யாவின் பிரபலமான நகரமான செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் அமைந்துள்ள புல்க்கோவா விமான நிலையத்தின் அருகே பறந்த இரண்டு ட்ரோன்களை ரஷ்ய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.45 மணியிலிருந்து புல்க்கோவா விமான நிலையம் விமான சேவையை நிறுத்தியுள்ளது.
என்ன காரணத்துக்காக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை என்றாலும், உக்ரைன் ட்ரோன்களால் அபாயம் என கருதப்படும்போது, இதற்கு முன்பும் இதேபோல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |