உக்ரைன் மீது போர் தாக்குதலை துவங்கியது ரஷ்யா! குண்டுகள் வெடிக்கும் பயங்கர சத்தம்... வெளியான வீடியோ காட்சிகள்
ஏவுகணைகளால் எங்களது தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் போர்க்கால அடிப்படையில் நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, 200,000 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர், எல்லைப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டன மற்றும் குடிமக்கள் தங்களை ஆயுதபாணியாக்கும் உரிமையை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ரஷ்ய படை குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ளும் மற்றும் வெற்றி பெறும். புடின் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியுள்ளார்.
Holy shit this explosion in Ukraine pic.twitter.com/oYVNSVwTe0
— Benny (@bennyjohnson) February 24, 2022
புடினை உலகம் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். செயல்பட வேண்டிய நேரம் இது. ஏவுகணைகளால் எங்களது தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என கூறியுள்ளார்.
இதனிடையில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புக்கு ராஷ்யாவே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Very large explosion in progress in Kiev capital of Ukraine
— Manu Thanikkal ☄ (@tis_manu) February 24, 2022
Large explosions heard near Kiev airport several minutes ago.
It seems that the Russians have already taken control of Kiev airport.
Credit : @EnCausee#Nifty #StockMarketindia#UkraineRussiaCrisis #UkraineRussie pic.twitter.com/1w3fCsAzRI