ஐரோப்பிய நாட்டிற்கு அருகே படைகளை குவிக்கும் ரஷ்யா! ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்
அமெரிக்க தனியார் நிறுவனம் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்களில், கிரிமியா மற்றும் உக்ரைனுக்கு அருகே ரஷ்யா தனது படைகளை குவித்து வருவதை காட்டுகிறது.
உக்ரைன் எல்லைக்கு அருரே ரஷ்யா தனது படைகளை குவித்த நாள் முதல் பதட்டம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
ஆனால், உக்ரைன் ஆக்கிரமிக்க உள்ளதாக பரவிய செய்திகளை மறுத்த ரஷ்யா, பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா தனியார் நிறுவனமாக Maxar வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில், சமீப வாரங்களாக கிரிமியா மற்றும் உக்ரைனுக்கு அருகே ரஷ்யா தனது படைகளை குவித்து வருதை காட்டுகிறது.
2014ம் ஆண்டு உக்ரைனிடமிருந்து கிரிமியாவை பிரித்த ரஷ்யா, அப்பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Maxar நிறுவனம் வியாழன் அன்று வெளியிட்ட படங்களில், டிசம்பர் 13ம் திகதி அன்று வரையிலான நிலவரப்படி கிரிமியாவில் உள்ள தளத்தில் நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் மற்றும் டாங்கிகளை ரஷ்யா குவித்துள்ளதை காட்டுகிறது.
அக்டோபரில் மாதம் எடுக்கப்பட்ட படத்தில், அதே தளம் பாதி காலியாக இருப்பதைக் காட்டுகிறது.
அதன் எல்லைக்குள் சொந்த படைகளை நகர்த்துவதற்கான உரிமை இருக்கிறது என்றும், மேற்கத்திய நாடுகள் அதன் எல்லைகளுக்கு அருகே ஆத்திரமூட்டும் வகையில் இராணுவ பயிற்சிகளை மேற்கொள்கின்றன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.