உக்ரைன் மீது தாக்குதல்! ரஷ்ய பங்குச்சந்தைகள் செயலிழப்பு.. வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முற்றிலுமாக மாஸ்கோ பங்குச்சந்தை நிறுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார், அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படும் வேளையில், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றார் புடின்.
இதையடுத்து உடனடியாக உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்ய பங்குச் சந்தைகள் செயலிழந்ததால், மாஸ்கோ பங்குச் சந்தை வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.