ரஷ்யாவின் விமான தளத்தை அழித்த உக்ரைன்: ட்ரோன் ஏவுதலில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
உக்ரைனிய தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா தனது ஆளில்லா விமான தளத்திலிருந்து ஏவுதலை நிறுத்தியுள்ளது.
உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் படைகள் பிரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க்(Primorsko-Akhtarsk) விமான நிலையத்தின் மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா அந்த தளத்திலிருந்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ஏவுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கிராஸ்னோடர்(Krasnodar) பிராந்தியத்தில் உள்ள இந்த விமான நிலையம், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் இரண்டையும் ஏவுவதற்கான முக்கிய இராணுவ தளமாக உக்ரைன் விமான படையால் முன்பு அடையாளம் காணப்பட்டது.
இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள், ரஷ்யா தனது ட்ரோன் ஏவுதல் நடவடிக்கைகளை Millerovo, Shatalovo, Oryol மற்றும் Kursk உள்ளிட்ட பிற இடங்களுக்கு மாற்றியுள்ளதைக் தெரியவந்துள்ளது.
உக்ரைனிய படைகளின் இந்த முன்னேற்றம் பிரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க்-கில் ட்ரோன் நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் திறனை கணிசமாக பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய படைகள் முன்னேற்றம்
அதே சமயம் கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ வெளியிட்ட தகவலின் படி, உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள நோவோம்லின்ஸ்க் கிராமத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |