அதிகாலை வரை நடந்த தாக்குதல்கள்: 6 மரணங்கள் என வெளியான தகவல்
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வரை தாக்குதல்கள்
உக்ரைனின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. 
ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், மின்சாரம் துண்டிப்பால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு டசின் பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் குறி இல்லை
உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் இதுகுறித்து கூறுகையில், "ரஷ்யப் படைகள் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் ஒடேசா பகுதிகளைத் தாக்கின. இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் இறந்தனர்" என்று தெரிவித்துள்ளது.
பலியான குழந்தைகள் 11 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் என்று அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்தார்.
ஆனால் ரஷ்யா இந்த தாக்குதல்கள் குறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் பொதுமக்களை குறி வைப்பதை மறுக்கிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்ஸ் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் ஒரு எண்ணெய் டேங்கரை தீப்பிடிக்க வைத்து, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |