ரஷ்யாவின் தாக்குதலுக்கு இரையான துருக்கிக் கப்பல்: அவசரமாக முடிவுக்கு வர வேண்டும் - அமைச்சகம்
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் துருக்கிக் கப்பல் ஒன்று ரஷ்யாவின் வான்வழித் தாக்குலில் சேதமடைந்தது.
ஒடேசாவில் தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்யாவில் தாக்குதல்களினால் துறைமுக உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதாகவும், தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் துருக்கி வலியுறுத்தி வருகிறது. 
இந்த சூழலில், துருக்கியின் கப்பல் ஒன்று ஒடேசாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
இதனை கீவ் மற்றும் அந்த கப்பலை இயக்கும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உக்ரைனின் புனரமைப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி குலேபா (Oleksiy Kuleba), ரஷ்யா பொதுமக்களின் துறைமுக உள்கட்டமைப்பு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் துருக்கிய கப்பல் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். 
மீண்டும் வலியுறுத்துகிறோம்
அதேபோல் துருக்கிய கடல்சார் நிறுவனமான சென்க் ஷிப்பிங், "புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் முழுமையாக ஏற்றப்பட்டிருந்த தங்களது கப்பல், உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது" என தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான படங்களில், நீலம் மற்றும் வெள்ளை நிறக் கப்பல் தீப்பிடித்து எரிவது காணப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், 'ரஷ்யாவிற்கு, உக்ரைனுக்கும் இடையிலான் போரை அவசரமாக முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |