24 மணிநேரத்தில் 655 தாக்குதல்கள்! இரவு முழுவதும் நகரமொன்றில் தாக்கிய ட்ரோன்கள்
உக்ரைனின் ஒடேசாவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட பெண்
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

ட்ரோன் தாக்குதல்களினால் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவிப்பதாக ஆளுநர் Oleg Kiper தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக பலி
அவர், "மீட்புப் பணியாளர்களால் தீ விரைவாக அணைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார்" என்று டெலிகிராமில் எழுதினார்.
அதேபோல் பிராந்திய இராணுவத் தலைவர் இவான் ஃபெடோரோவ், கருங்கடல் துறைமுகப் பகுதியின் வடகிழக்கில் கடந்த 24 மணி நேரத்தில் சபோரிஜியா பகுதியில் நடந்த ஓவர் தாக்குதலில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
கடந்த 24 மணிநேரத்தில் படையெடுப்பாளர்கள் சபோரிஜியா பிராந்தியத்தில் 41 குடியிருப்புகளில் 655 தாக்குதல்களை நடத்தினர்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |