போரை நிறுத்த ட்ரம்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி: உக்ரைனின் முக்கிய நகரைத் தாக்கிய ரஷ்யா
உக்ரைனின் கீவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் பலியானார்.
கீவ் மீது தாக்குதல்
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார்.

அமைதி ஒப்பந்த திட்டம் குறித்து தலைவர்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் கீவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல மணிநேரம் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை நீடித்ததாக கீவ் நகரில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

320,000க்கும் மேற்பட்ட மக்கள்
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் 47 வயது பெண் என்று கீவ் பிராந்திய ஆளுநர் Mykola Kalashnyk தெரிவித்தார்.
மேலும் அவர், 320,000க்கும் மேற்பட்ட மக்கள் நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர் என்றார்.
கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, "தலைநகரில் ஏற்கனவே 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மழலையர் பாடசாலைகள், பாடசாலைகள் மற்றும் சமூகக் கட்டிடங்களில் வெப்பமூட்டும் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டம் குறித்து ட்ரம்பை புளோரிடாவில் சந்தித்து ஜெலென்ஸ்கி பேச இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |