கீவ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்
உக்ரைன் தலைநகருக்கு வடகிழக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் கொல்லப்பட்டதாக
உக்ரைனின் கீவ்வின் வடகிழக்கில் உள்ள புரோவரி மாவட்டத்தில் ரஷ்யத் தாக்குதல் நடத்தியது.

இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், மூன்று பேர் காயமடைந்ததாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார்.
கணிசமாக அதிகரித்துள்ள தாக்குதல்
சமீபத்திய மாதங்களில், மாஸ்கோ உக்ரைன் தலைநகர் மீதான தனது தாக்குதல்களை கணிசமாக அதிகரித்துள்ளது.
அடிக்கடி, இடைமறிக்க கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறுகிய நேரத் தாக்குதல்களாக நடத்தி வருகிறது.
இந்த சூழலில் வரவிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து கீவ் எச்சரித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |