உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பாரிய தாக்குதல்: தொழில்நுட்ப பேரழிவு என எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பாரிய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பல பிராந்தியங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.
வெப்பமாக்கல் தடைகளை சந்திக்கும்
சமீபத்திய மாதங்களில் உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா அதிகரித்துள்ளது. 
இதன்மூலம் அங்கு வெப்பமாக்குவதற்கான முக்கிய எரிபொருளை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயு வசதிகளை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
குளிர்கால மாதங்களுக்கு முன்னதாக, உக்ரைன் வெப்பமாக்கல் தடைகளை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அவசர மின்வெட்டுகள்
எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா கிரின்சுக் கூறுகையில், "எதிரி உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை மீண்டும் பெருமளவில் தாக்கி வருகிறார். இதன் காரணமாக, உக்ரைனின் பல பகுதிகளில் அவசர மின்வெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதிரியின் திட்டங்கள் இருந்தாலும், உக்ரைனில் இந்த குளிர்காலத்தில் ஒளி மற்றும் வெப்பம் இருக்கும்" என்றார்.
இதற்கிடையில், கிழக்கு நகரமான டினிப்ரோவில் நடந்த ஒரு ட்ரோன் தாக்குதலில் 9 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது. அதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |