உக்ரைனின் மிகப்பெரிய மொபைல் சேவை..தரவு மையங்களை தாக்கிய ரஷ்யா
Russi strike ukraine's largest mobile provider: உக்ரைனின் மிகப்பெரிய மொபைல் சேவை வழங்குநர் ரஷ்யாவினால் தாக்குதலுக்கு உள்ளானது.
கீவ்ஸ்டார் என்ற உக்ரைனின் மொபைல் சேவை நிறுவனத்தின் தலைமையகத்தை ரஷ்யா தாக்கியதாக தெரிய வந்துள்ளது.
கீவ்ஸ்டார்
உக்ரைனின் மிகப்பெரிய மொபைல் சேவை வழங்குநரான கீவ்ஸ்டார் நிறுவனத்தின் தலைமையகத்தை, ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா தாக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கீவ்ஸ்டார் நிறுவனம் உக்ரைன் செய்தி நிறுவனத்திடம், கீவ் நகரில் உள்ள தனது தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியது.
கீவ் நகரில் உள்ள ஒரு தரவு மையத்தை ரஷ்யா இரண்டு முறை தாக்கியதில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் காயமடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
இதற்கிடையில், உக்ரேனிய தரவு மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகிறது.
