தற்காலிக முகாம்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு: ஜெலென்ஸ்கி கண்டனம்
Russia strikes on southeast zaporizhzhia kill 18: சபோரிஷியா பகுதியில் ரஷியா நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல்
உக்ரைனின் தென்கிழக்கு சபோரிஷியா (Zaporizhzhia) பகுதியில் ரஷியா நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை மிகவும் கொடூரமானது எனக் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, கொமிஷுவாகா (Komyshuvakha) கிராமத்தையே ரஷ்ய படைகள் முதன்மையாகக் குறி வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொதுமக்கள் தங்கியிருந்த ஒரு தற்காலிக முகாம் மற்றும் தொண்டு உதவிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த உள்ளூர் பள்ளி ஆகிய பகுதிகள் மீது ரஷ்யா குண்டுகளை நேரடியாக வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களையும் நிவாரண மையங்களையும் இலக்கு வைத்து தாக்குவது, அமைதியை ஏற்படுத்த மாஸ்கோ விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்த ஜெலென்ஸ்கி, போரையும் வன்முறையையும் ரஷ்யா தொடர்ந்து நீடித்து வருவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.