உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! 41 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் வான் தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்
ரஷ்யா திங்கட்கிழமை அன்று உக்ரைன் மீதான பயங்கர ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது.
இந்த தாக்குதலில் தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக தலைநகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது, மொத்தமாக இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுடன் இருந்த பெற்றோர்கள் மருத்துவமனை வெளியே கலங்கிய நிலையில் காணப்படுகின்றனர். அங்கு ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, தெருக்களில் குப்பைகள் சிதறிகிடப்பதை பார்க்கமுடிகிறது.
ஜெலென்ஸ்கி கண்டனம்
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தாக்குதலில் பிரசவ மையம், குழந்தை பராமரிப்பு மையங்கள், ஒரு வணிக மையம் மற்றும் வீடுகள் என பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
Imagine Putin deliberately bombing London’s Great Ormond Street Hospital.
— Dr Rachel Clarke (@doctor_oxford) July 8, 2024
Today, in Kyiv, he’s done exactly this. Ohmatdyt is Ukraine’s foremost children’s hospital, caring for children from all across the country.
The attack is despicable.#SlavaUkraini 🇺🇦 pic.twitter.com/gQ8FDGvKJL
"ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும்," என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தடுத்து நிறுத்தப்பட்ட ஏவுகணைகள்
இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட 38 ஏவுகணைகளில் 30ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியதாகவும், மீதமுள்ளவை தாக்குதல் இலக்கை அடைந்தாகவும் தெரியவந்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு சேவை ஏவுகணையை Kh-101 குரூஸ் ஏவுகணை என அடையாளம் கண்டுள்ளது.
தலைநகரில் மட்டும் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் கீவ் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |