அடங்காத ரஷ்யா! உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தந்த சக்திவாய்ந்த ஆயுதங்களை அழித்துவிட்டதாக அறிவிப்பு
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய முக்கிய ஆயுதங்களை ரஷ்யா அழித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் சண்டை 67 நாட்களாக நடந்து வருகிறது. போரை நிறுத்த மறுப்பு தெரிவித்து ரஷ்யா அடங்க மறுக்கும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
அதன்படி உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்கள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர்விமானம்! இதோ ஆதாரம்
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி யஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் 2 சு-24எம் ரக போர்விமானங்களை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு கருவிகள் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.