சுட்டு வீழ்த்தப்பட்ட 1,200 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய வெளியிட்ட புள்ளி விவரம்
ஒரே வாரத்தில் உக்ரைனின் சுமார் 1,200 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 1200 ட்ரோன்கள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1200 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 4 மேற்கத்திய தயாரிப்புகள் உட்பட 5 மல்டிபிள் லான்ச் ராக்கெட் சிஸ்டம்ஸ் லாஞ்சர்கள் ரஷ்ய பாதுகாப்பு படையால் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 நெப்டியூன் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், அமெரிக்க தயாரிப்பு HIMARS மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம் மற்றும் 1,200 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த இழப்புகளின் எண்ணிக்கை
போர் தொடங்கியதில் இருந்து இதுவரையிலான உக்ரைனிய ராணுவ இழப்புகள் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி இதுவரை 100,422 ட்ரோன்கள், 668 விமானங்கள், 283 ஹெலிகாப்டர்கள், 1,626 மல்டிபிள் ராக்கெட் லான்ச் சிஸ்டம் ஆகியவை அழைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |