உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்
உக்ரைனின் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தாக்குதல்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மிகப்பெரிய அளவிலா வான்வழித் தாக்குதலை ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்தி இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அதிநவீன ஏவுகணைகள், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் என மொத்தம் 703 இலக்குகளை குறிவைத்து ரஷ்யா இந்த வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

உக்ரைனிய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, கிட்டத்தட்ட 19 Iskander-M/S-400 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 20 கே.எச் 101 குரூஸ் ஏவுகணைகள், 5 Iskander-K குரூஸ் ஏவுகணைகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் Shahed, Gerbera மற்றும் Italmas உட்பட 659 ஆளில்லா விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட வான்வழி ஆயுதங்கள்
மொத்தம் 19 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில் 8 சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, ஏவப்பட்ட 25 க்ரூஸ் ஏவுகணைகளில் 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அதைப்போல ஏவப்பட்ட 659 ட்ரோன்களில் 636 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 90% வீழ்த்தப்பட்டாலும், 12 ஏவுகணைகள், 20 ட்ரோன்கள் உக்ரைன் பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் சென்று 26 இடங்களை தாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |