ரஷ்யா தயாரிக்கும் ரகசிய ஆயுதம்! குறிவைக்கப்படும் ஸ்டார்லிங்க்: எலான் மஸ்க்கின் அதிர்ச்சி
ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தகவல் தொடர்பு கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.
உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டிய எலான் மஸ்க்
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் முதல்படியாக ரஷ்ய படைகள் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை தாக்கி அழித்தனர்.
இதனால் வீரர்கள் தகவல் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் அவதி அடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் தங்களுடைய ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவையை வழங்கி உக்ரைனிய இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, உக்ரைனிய ராணுவத்திற்கு தகவல் தொடர்பினை வழங்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிப்போம் என்று ரஷ்ய ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மேலும் கீழடுக்கு சுற்று வட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்க எஸ் 500 ஏவுகணைகள் மூலம் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்து இருந்தது.
ரகசிய ஆயுதம் தயாரிக்கும் ரஷ்யா
இந்நிலையில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைகோள்களை அழிக்க ரஷ்யா ரகசிய ஆயுதங்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அழிக்க வெடிகுண்டுகளில் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக நேட்டோ சந்தேகிக்கிறது.
இந்த இரும்பு துண்டுகள் செயற்கைக்கோள் மூலம் எடுத்து செல்லப்பட்டு 550 கி மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் தூவப்படும், இந்த கூர்மையான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மீது மோதி சேதப்படுத்தும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் முறை செயற்கை கோள்களின் சோலார் பேனல்களை எளிதாக சேதப்படுத்துவதுடன், சுற்றுவட்டப்பாதையில் உள்ள அனைத்து நாடுகளின் செயற்கைக்கோள்களையும் பாதிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |