இதை கைவிடுங்கள்.. இல்லையெனில் இதை எதிர்கொள்ளுங்கள்! பிரித்தானியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
பெருளாதார தடை என்ற பேச்சை பிரித்தானியா கைவிட வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான பற்றம் அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியா வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த வாரம் பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் Ben Wallace மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்திற்கு பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின் அளித்த பேட்டியில், ரஷ்யாவின் பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானியா ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைத்தால், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
அவர்கள் மீண்டும் எங்களை பொருளாதாரத் தடைகளால் அச்சுறுத்த ரஷ்யாவிற்கு வருகிறார்கள் என்றால் அது அர்த்தமற்றது.
பிரித்தானியா தனது பொருளாதாரத் தடைகளை கைவிட வேண்டும், இல்லையெனில் பிரித்தானியா-ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு மிகவும் குறுகியதாக இருக்கும் என ஆண்ட்ரே கெலின் தெரிவித்துள்ளார்.