7,000 மைல் வேகத்தில் சீறி பாயும் ஏவுகணை! சிர்கான் ஏவுகணையை வெளிப்படுத்திய ரஷ்யா
உலக நாடுகளுடன் அதிகரித்து வரும் மோதல் போக்குகளுக்கு மத்தியில் ரஷ்யா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது.
ஏவுகணை சோதனை
கிழக்கு மத்தியதரைக் கடலில் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைகளை(Zircon missiles) ஏவி ரஷ்யா கடற்படை இராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 7,000 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த உயர் வேக ஏவுகணைகள் உலகில் தனித்துவமானவை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய இராணுவ பயிற்சியில், சிர்கான் ஏவுகணைகளுடன், ரஷ்ய ராணுவம் கலிபர் கப்பல் ஏவுகணையையும்(Kalibr cruise missile) ஏவியது, இது அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட ஆயுதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக ஒனிக்ஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையும்(Onyx anti-ship missile) கடலோரப் பகுதியிலிருந்து ஏவப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
இந்த பயிற்சிகள் கடற்படை மற்றும் விமானப்படையின் இடையே ஒருங்கிணைப்பை சோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக் கடலில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இடம் வெளியிடப்படவில்லை என்றாலும், ரஷ்யா சிரியாவின் டார்டஸில் கடற்படை தளத்தை வைத்து இருப்பது அனைவரும் அறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மத்தியதரைக் கடலில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றமானது ரஷ்யாவின் திடீர் நிலைப்பாட்டையும் அதன் மேம்பட்ட ஆயுதங்களை வெளிப்படுத்தும் விருப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |