கிம் ஜோங் உன்னிற்கு விடுதலைக்காக நன்றி தெரிவித்த ரஷ்யா

Kim Jong Un Ukraine Russia
By Sivaraj Apr 26, 2026 01:52 PM GMT
Report

குர்ஸ்க் விடுதலைக்காக வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 

ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகள் 

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் வடகொரியர்கள் பலரை ரஷ்யா ஈடுபடுத்தியது. ஆயிரக்கணக்கான துருப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை வடகொரியா அனுப்பியது. 

Kim Jong Un

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குர்ஸ்க்கிற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகள் அனுப்பப்பட்டனர். ஆனால், சுமார் 2000 வடகொரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சியோல் மதிப்பிடுகிறது.

பீட்ஸா கடை ஊழியர் கொலை: 13 முதல் 17 வயதுடைய ஆறு சிறுவர்கள் கைது..இஸ்ரேலில் அதிர்ச்சி சம்பவம்

பீட்ஸா கடை ஊழியர் கொலை: 13 முதல் 17 வயதுடைய ஆறு சிறுவர்கள் கைது..இஸ்ரேலில் அதிர்ச்சி சம்பவம்

இதற்கு பதிலாக, வடகொரியா ரஷ்யாவிடம் இருந்து நிதி உதவி, இராணுவத் தொழில்நுட்பம், உணவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றைப் பெற்று வருவதாகவும், இது வடகொரியாவின் தடைசெய்யப்பட்ட அணுசக்தித் திட்டங்கள் மீதான கடுமையான சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க உதவுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில், உக்ரேனியர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக குர்ஸ்க் நகருக்குத் துருப்புகளை அனுப்பி "குர்ஸ்க் நகரை விடுவித்ததற்காக" வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு, ரஷ்யாவின் ஸ்டேட் டூமா சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக TASS செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 

தோளோடு தோள் நின்று போராடி

உக்ரைன் போரில் கொல்லப்பட்டவர்களை கௌரவிக்கும் நினைவு வளாகத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள, ரஷ்ய தூதுக்குழுவுடன் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் சனிக்கிழமை வடகொரியாவிற்கு வந்தடைந்தார். 

Kim Jong Un

அப்போது அவர், "மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும், குர்ஸ்க் விடுதலையில் சகோதரத்துவ ஆதரவை வழங்கிய கொரிய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரிய வீரர்கள் நமது வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தோளோடு தோள் நின்று போராடி, உக்ரேனிய நாஸிக்களிடம் இருந்து ரஷ்ய மண்ணை விடுவித்தனர்" என்றும் கூறியதாக செய்தி நிறுவனம் மேற்கோள்கட்டியுள்ளது. அதே சமயம் இந்த சந்திப்பு குறித்து வடகொரியா இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.     

Kim Jong Un/Vladimir Putin   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US