நேட்டோ அமைப்பில் இணைய விரும்பிய ரஷ்யா.. உங்களுக்கு தெரியுமா?
ஒரு காலகட்டத்தில் ரஷ்யா நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியதற்காக அதன் மீதும், பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்ததற்காக அந்நாடுகள் மீதும் கோபத்திலிருக்கும் ரஷ்யா, ஒரு காலகட்டத்தில் நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததாம்.
இன்று மேற்கத்திய நாடுகள் என்றாலே வெறுப்பை உமிழும் புடின், அன்று அந்நாடுகளிடம் நேசக்கரம் நீட்ட தன் விருப்பத்தை வெளிக்காட்டிய ஒரு நிகழ்வாக அது கருதப்படுகிறது. 2000ஆம் ஆண்டு, ரஷ்ய ஜனாதிபதியாக இருக்கும்போது, ரஷ்யா ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஒரு பாகம், என் சொந்த நாடே ஐரோப்பாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை என்னால் கற்பனை கூட செய்துபார்க்கமுடியவில்லை.
ஆகவே, நேட்டோவை ஒரு எதிரியாகப் பார்ப்பது எனக்குக் கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார் புடின். தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன் இப்படிக் கூறிய புடின், பின்னர் ரஷ்ய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே ஆண்டு, நேட்டோ அமைப்பின் தலைவராக இருந்த George Robertsonஇடம், எப்போது நேட்டோ அமைப்பில் இணைய எங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பப்போகிறீர்கள் என்று கேட்டாராம் புடின். அவரிடம், நீங்கள்தான் நேட்டோவில் இணைய விண்ணப்பம் செய்யவேண்டும், அழைப்பிதழ் கொடுக்கப்படாது என்றாராம் George Robertson.
பல்வேறு காரணங்களால் அது நிறைவேறாமல் போக, சிலர் அதற்கு காரணம் ரஷ்யாதான், அது சீரியஸாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்கிறார்கள். வேறு சிலரோ, ரஷ்யா பனிப்போரில் தோற்றுப்போனதால், அதை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு சமமான ஒரு சக்தியாக மதிக்கவில்லை என்கிறார்கள்.
எப்படியும், அப்படி ஒரு விடயம் நடந்திருந்தால், இன்று உக்ரைன் ஆக்கிரமிப்பு என்றொரு பிரச்சினையே ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.