அமெரிக்காவிற்கு அந்த நாடு மிக ஆபத்தான அச்சுறுத்தல்: பகிரங்கமாக அறிவித்த ட்ரம்ப்
ரஷ்யா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அசாதாரண அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டின் மீது முதல் முறையாக பாரிய தடைகளை விதித்துள்ளார்.
உக்ரைன் நிலைமை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைநகர் மாஸ்கோவில் ட்ரம்பின் சிறப்பு தூதரான Steve Witkoff-ஐ சந்தித்து உக்ரைன் தொடர்பில் உரையாடியுள்ள அதே நாளில், ரஷ்யா அச்சுறுத்தல் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Steve Witkoff உடனான மூன்று மணி நேர உரையாடல் பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா அதை உடனடியாக மறுத்துள்ளது.
இந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், உக்ரைன் நிலைமை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு மூத்த அதிகாரிகளிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளேன்.
ரஷ்ய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு அசாதாரணமான மற்றும் வழமைக்கு மாறான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
50 சதவீத வரி
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தவிர்த்து வந்த நிலையில், இந்தியா அந்த வாய்ப்பினை பெருமளவில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
இதனையடுத்து ஆகஸ்டு 27 முதல் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிக்கு 50 சதவீத வரி என்பது அமுலுக்கு வருகிறது. மேலும், இந்தியா போன்று ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்துள்ள சீனா போன்ற நாடுகளுக்கும் சிறப்பு வரி விதிப்பு உறுதி என்றே வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மட்டுமின்றி, ரஷ்ய எண்ணெய் கப்பல்களுக்கும் தடை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |