பழிக்கு பழி... ஐரோப்பாவுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்தால், அதற்கு பழக்கு பழி வாங்குவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை தண்டிக்கும் விதமாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்க தயாராக வருகின்றன.
ஆனால், இந்த திட்டத்தை ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் நிராகரித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்தால், அதற்கு பழிக்கு பழியாக ஜேர்மனிக்கான அதன் முக்கிய எரிவாயு குழாயை மூடுவோம் என ரஷ்ய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பது, உலகளாவிய விநியோகத்திற்கு மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டொலர் அதிகரிக்கும் என ரஷ்யாவின் துணை பிரதமர் Alexander Novak தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவுக்கு முழு உரிமையும் உண்டு என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு தேவையான 40% எரிவாயு மற்றும் 30% எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது.
ரஷ்ய அதன் விநியோகத்தை நிறுத்தினால், அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் எந்த நாட்டிடமிருந்தும் எரிவாயு மற்றும் எண்ணெயை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.