பிரான்சிற்குள் படையுடன் நுழைவோம்... மிரட்டல் விடுத்த ரஷ்யா
பிரான்ஸ் மீது படையெடுக்கத் தயாராக இருப்பதாக விளாடிமிர் புடினின் நெருக்கமான அதிகாரி ஒரு கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
வேட்டையாடும் நபர்
பிரெஞ்சு செய்தி ஊடகமான LCIக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதியை கோபமாகக் கண்டித்து, அவரை ஒரு வேட்டையாடும் நபர் என்றும், ஒரு அரக்கன் என்றும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் குறிப்பிட்டிருந்தார்.
இதுவே விளாடிமிர் சோலோவியோவ் என்ற புடினுக்கு மிக நெருக்கமான அதிகாரியை கொந்தளிக்க வைத்துள்ளது. பொதுவாக டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் விளாடிமிர் சோலோவியோவ் இந்த முறை மேக்ரானுக்கு எதிராக சாடியுள்ளார்.
2021 டிசம்பர் மாதமே ரஷ்யா நேட்டோவின் நகர்வுகளை கடுமையாக விமர்சித்திருந்தது என்றும், ரஷ்ய எல்லையில் அவர்களுக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பியிருந்ததையும் குறிப்பிட்ட சோலோவியோவ்,
அதிகாரிகளின் ஷூவுக்கு
தற்போது நாங்கள் அவர்களின் வீட்டு வாசலில் சென்றிருக்கும் அரக்கன் என்றும், நேட்டோ படைகளை எல்லைக்கு அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர் என்றார்.
நாங்கள் பிரான்ஸ் மீது படையெடுக்க தயாராகவே இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ள சோலோவியோவ், ரஷ்ய அதிகாரிகளின் ஷூவுக்கு மேக்ரான் பாலிஷ் செய்வர் என்றும் விமர்சித்துள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் போர்களுக்குப் பிறகுதான் ரஷ்ய வீரர்கள் கடைசியாக பிரான்ஸில் கால் பதித்தனர். மார்ச் 31, 1814ல், மற்ற கூட்டணி நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யப் படைகள் பிரெஞ்சு தலைநகரை அடைந்து உள்ளே நுழைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |