புடினின் மிரட்டல் விளையாட்டல்ல... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் எச்சரிக்கை
தீவிரப்படுத்தப்படும் தாக்குதல் மற்றும் புதிய ஆயுதங்களின் பயன்பாடு உள்ளிட்ட விளாடிமிர் புடினின் மிரட்டல் என்பது விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் எச்சரித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் மீது
விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்தால் அதில் உண்மை இருக்கும் என்றும் ஓர்பன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான மோதல் என்பது ஒரு உலகளாவிய போரின் பண்புகளைக் கொண்டுள்ளது என வியாழன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகள் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணு ஆயுதம் பொருத்தக்கூடிய ஏவுகணை ஒன்றை உக்ரைன் மீது வீசியதன் பின்னர் புடின் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான ஜனாதிபதியாக இருக்கும் ஓர்பன் விடுத்துள்ள எச்சரிக்கையில், ரஷ்யா தனது கொள்கையை உலகில் அதன் இடத்தையும் இராணுவ சக்தியை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.
புடின் மிரட்டல் விடுக்கிறார்
இவ்விஷயத்தில் ரஷ்யா ஏதாவது சொன்னால், அதை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடின் மிரட்டல் விடுக்கிறார் என்றால், உண்மையில் அது வெறும் வாய்ப்பேச்சு அல்ல என்றும் ஓர்பன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் அணுக் கோட்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வெறும் தோரணை அல்ல என்றும் ஓர்பன் வாதிட்டுள்ளார். ரஷ்யா தங்களின் அணு ஆயுத விதிகளில் திருத்தம் செய்கிறது என்றால், அது கவனத்தில் கொள்ள வேண்டியது நமது கடமை என்றார்.
தீவிர புடின் ஆதரவாளரான ஓர்பன் பலமுறை சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் 2022ல் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனுக்கு இராணுவ உதவி அல்லது நிதியுதவியை அனுப்பவும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |