அமெரிக்க பிரதிநிதிகள் ரயிலில் உக்ரைனுக்குச் சென்றதால் எரிச்சலில் ஐந்து ரயில் நிலையங்களை குண்டு வீசி தகர்த்த ரஷ்யா!
அமெரிக்க மூத்த அலுவலர்கள் இருவர் உக்ரைனுக்கு சென்றதால் எரிச்சலடைந்துள்ள ரஷ்யா, தனது எரிச்சலை அராஜகச் செயல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinkenம், பாதுகாப்புச் செயலரான Lloyd Austinம் நேற்று உக்ரைன் தலைநகர் Kyiv சென்று நேரடியாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார்கள்.
அந்த சந்திப்பின்போது, உக்ரைனுக்கு 713 மில்லியன் டொலர்கள் அளவுக்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக வாக்களித்ததுடன், ரஷ்யாவின் போர் நோக்கத்தைப் பொருத்தவரை, ரஷ்யா ஏற்கனவே தோற்றுவிட்டது, உக்ரைன் வென்றுவிட்டது என்று கூறியுள்ளார் Blinken.
உக்ரைன் தலைநகரை இந்நேரத்துக்குக் கைப்பற்றியிருக்கவேண்டும் என திட்டமிட்டிருந்த புடினுக்கு, அமெரிக்க மூத்த அதிகாரிகள் இருவர் அங்கு சென்றுள்ள விடயம் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, சிறுபிள்ளைத்தனமாக, அமெரிக்க அதிகாரிகள் ரயிலில்தானே வந்தார்கள், அந்த ரயில் நிலையங்களையே தகர்த்துவிடுவோம் என Lviv, Rivne, Vinnyista மற்றும் Kyiv பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை ஏவுகணை வீசி தகர்த்துள்ளது ரஷ்யப் படைகள்.
அமெரிக்க மாகாணச் செயலரான Blinkenம் பாதுகாப்புச் செயலரான Austinம் ரயிலில் உக்ரைனுக்கு வந்ததைத் தொடர்ந்து ரயில் நிலையங்கள் தகர்க்கப்பட்ட விடயம், ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு விடும் எச்சரிக்கையாக கருதப்படுகிறது.