ரஷ்யா சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தி...கொடி தினத்தில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு
அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் ரஷ்யா பின்பற்றும்.
கொடி தினத்தில் ரஷ்யாவை சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தியாக விவரித்தார் ஜனாதிபதி புடின்.
ரஷ்யா தனது அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 179 வது நாளாக தொடரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தென்கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் ரஷ்யாவின் கொடி தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி புடின் ரஷ்யாவை சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தியாக விவரித்தார்.
அத்துடன் நாட்டின் தேசிய கொடியானது நமது பாரம்பரிய விழுமியங்களுக்கு விசுவாசத்தை அடையாளப்படுத்துகிறது என்றும் அதிலிருந்து நாம் ஒருபோதும் விலக மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஜெர்மன் அதிபருடன் புகைப்படம் எடுத்த பெண்கள்: திடீரென மேலாடையை கழற்றி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு!
EPA
மேலும் உண்மை மற்றும் நீதி, ஒற்றுமை மற்றும் கருணை, பல நூற்றாண்டுகள் பழமையான ரஷ்யாவின் தொடர்ச்சியான வரலாறு, நம் முன்னோர்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்கு மரியாதை, தாய்நாட்டை பாதுகாப்பதும், வெளிப்புற ஆணை மற்றும் மேலாதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்று நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.