வேலை செய்யும் வயதை 12ஆக குறைக்க ரஷ்யா திட்டம்
வேலை செய்யும் வயதை 12ஆக குறைக்க ரஷ்யா திட்டமிட்டுவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
வேலை செய்யும் வயதை குறைக்க திட்டம்
ரஷ்ய ஜனாதிபதியான புடின், தங்கள் நாட்டில் வேலையின்மை வீதம் 2 சதவிகிதமே என ஒரு காலத்தில் பெருமையாக கூறுவதுண்டு. ஆனால், இப்போது ரஷ்யாவில் வேலை செய்ய 1.5 மில்லியன் புதிய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

அத்துடன், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததும், கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்புவதற்காக சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
மேலும், உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, ரஷ்யாவில் வேலை செய்ய ஆட்கள் ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ரஷ்யாவின் சிறார் உரிமைகள் ஆணையரான ஓல்கா (Olga Yaroslavskaya) என்பவர், பள்ளி விடுமுறைகளின்போது 12 வயதுடைய பிள்ளைகளைக் கூட வேலை செய்ய அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவைப் பொருத்தவரை, இப்போதைக்கு பிள்ளைகள், பெற்றோர் அனுமதியுடன் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு குறைந்தது 14 வயதாவது இருக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டுமென்றால், பிள்ளைகளுக்கு 15 வயதாவது ஆகியிருக்கவேண்டும்.
இந்நிலையில், தான் 12 வயதேயான பிள்ளைகளிடம் பேசியதாக தெரிவிக்கும் ஓல்கா, அவர்கள் அனைவரும் கோடை விடுமுறையின்போது வேலை செய்ய விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கிறார்.
ஆக, ஏற்கனவே ரஷ்யாவுக்கு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், வேலை செய்யும் வயது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |