பின்லாந்திற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ரஷ்யா!
பின்லாந்திற்கான எரிவாயு விநியோத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக பின்லாந்திடம் ரஷ்யா தெரிவித்துள்ளதாக பின்லாந்து அரசுக்கு சொந்தமான எரிவாயு மொத்த விற்பனையாளர் நிறுவனமான காசும் (Gasum) அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதிக்கு ரூபிள்களில் பணம் கொடுக்க ரஷ்யா ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்தது, இதற்கு காசும் நிறுவனம் மறுத்துவிட்டது.
எங்கள் விநியோக ஒப்பந்தத்தின் கீழ் இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்று காசும் தலைமை நிர்வாக அதிகாரி Mika Wiljanen அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த சூழ்நிலை எதிர்கொள்ள நாங்கள் கவனமாக தயாராகி வருகிறோம், மேலும் எரிவாயு பரிமாற்ற நெட்வொர்க்கில் எந்த இடையூறும் ஏற்படாது, வரும் மாதங்களில் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயுவை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
[9SZ2BE]Mika Wiljanen
பின்லாந்தில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் பெரும்பகுதி ரஷ்யாவிலிருந்து வருகிறது, ஆனால் பின்லாந்தின் வருடாந்திர எரிசக்தி நுகர்வில் இது 5% மட்டுமே ஆகும்.
முன்னதாக, புதன்கிழமை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேர விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.